விவசாயியை மிரட்டிய 4 பேர் கைது
விவசாயியை மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலப்பாளையம்:
நெல்லை மேலப்பாளையம் மேலக்கருங்குளம் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் பண்டாரம் மகன் முருகையா. இவர் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே ஒரு ஓட்டல் முன்பு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்த மூர்த்தி மகன் பிரவீன் (வயது 25), மேலப்பாட்டத்தை சேர்ந்த குமார் மகன் சிவா என்ற குட்டசிவா (23), ராஜவல்லிபுரத்தை சேர்ந்த மகாதேவன் (26), மணக்காடு பகுதியை சேர்ந்த மகாராஜா (20) உள்ளிட்டோர் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முருகையா மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், பிரவீன், சிவா என்ற குட்டசிவா, மகாதேவன், மகாராஜா ஆகியோர் மீது ஆயுத தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.