6 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது


6 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது
x

நெல்லையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 6 கிலோ கஞ்சாவுடன் வந்த 4 பேரை கைது செய்தனர்

திருநெல்வேலி

நெல்லையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 6 கிலோ கஞ்சாவுடன் வந்த 4 பேரை கைது செய்தனர்.

தீவிர சோதனை

நெல்லை மாநகர பகுதிகளில் புகையிலை, கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், துணை கமிஷனர்கள் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

6 கிலோ கஞ்சா

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மேலப்பாளையம் கருங்குளம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் சந்தேகம் அடைந்து அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மேலப்பாளையம் மேலநத்தம் பகுதியை சேர்ந்த சிவசாமி மகன் மகாராஜன் (வயது 20), வீரவநல்லூரை சேர்ந்த இசக்கிபாண்டி மகன் ராஜவேல் (30), தருவை பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் அய்யப்பன் (21), குறிச்சி பகுதியை சேர்ந்த முத்துகுமார் (20) என்பது தெரியவந்தது.

4 பேர் கைது

இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தார். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட ராஜவேல் மீது வீரவநல்லூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story