சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணி
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே ஒர்குடி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒர்குடி வெட்டாறு பாலம் அருகே நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒர்குடி கீழத்தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்தி (வயது 31), சிக்கல் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ஒச்சப்பன் மகன் ஜெயவீரபாண்டியன் (42), முருகன் மனைவி கார்த்திகேஸ்வரி (40), நாகை வெளிப்பாளையம் தாமரைக்குளம் தெருவை சேர்ந்த அர்சுணன் மனைவி ராணி (54) ஆகியோர் என்பதும், அவர்கள் சாராயம் விற்றதும் தெரியவந்தது.
4 பேர் கைது
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, ஜெயவீரபாண்டியன், கார்த்திகேஸ்வரி, ராணி ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.