ரெயிலில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பெண்கள் உள்பட 4 பேர் சிக்கினர்


ரெயிலில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பெண்கள் உள்பட 4 பேர் சிக்கினர்
x

அரக்கோணத்தில் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பெண்கள் உள்பட 4 பேர் சிக்கினர்

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணத்தில் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பெண்கள் உள்பட 4 பேர் சிக்கினர்

அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக வந்து செல்லும் ரெயில்கள், நடைமேடை பகுதிகளில் நேற்று காலை சோதனை நடத்தினர். அப்போது 5-வது நடைமேடையில் அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா வரை செல்லும் ரெயில் பெட்டிகளில் சோதனையில் ஈடுபட்டபோது நடைமேடை அருகே பைகளில் சுமார் 450 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டு அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியை சேர்ந்த ராணி (வயது 60), பாஞ்சாலம்மாள் (58), நாராயணன் (62) மற்றும் செந்தாமரை (66) ஆகியோர் ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story