நகை பறிப்பு கும்பல் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது


நகை பறிப்பு கும்பல் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

வேலூரில் நகை பறிப்பு கும்பல் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

நகை பறிப்பு

வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்தவர் லோகேஷ்குமார் (வயது 30). இவர் கடந்த மார்ச் மாதம் வேலப்பாடியில் உள்ள வங்கி கிளையில் 15 பவுன் நகைகளை அடமானம் வைக்க சென்றார். அவர் வங்கிக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் லோகேஷ்குமார் வைத்திருந்த நகை பையை பறித்து சென்று விட்டனர். செல்லும் வழியில் மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்த அவர்கள் மோட்டார்சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

போலீசார் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூரைச் சேர்ந்த செந்தில்குமார் (37), சேலத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (23), திருச்சியைச் சேர்ந்த ராஜசேகர் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

கே.வி.குப்பம் அடுத்த காளாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன் (21), இவர் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பனமடங்கி போலீசார் கைது செய்தனர். இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் செந்தில்குமார், ஈஸ்வரன், ராஜசேகர், கதிரவன் ஆகிய 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டனர். இதற்கான நகல் அவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story