சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது
சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது
நாகப்பட்டினம்
கீழ்வேளூர் போலீஸ் சரகம் பொரவச்சேரி, தேவூர், திருக்கண்ணங்குடி பகுதிகளில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு மாரியம்மன் கோவில் தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த தனபாலன் (60), தேவூர் அரசினர் விடுதி பகுதியில் சாராயம் விற்ற வெளிப்பாளையம் வடக்கு நல்லியான் தோட்டம் பகுதியை சேர்ந்த மனோகரன் மனைவி லதா (50), தெற்காலத்தூர் காலனி தெருவை சேர்ந்த கணேசன் மகன் முரசொலி மாறன் (23), திருக்கண்ணங்குடி பகுதியில் சாராயம் விற்ற திருக்கண்ணங்குடி கூடக்குடி பகுதியைச்சேர்ந்த அறிவழகன் மகன் பரணி குமார் (30) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 330 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story