நெல்லை கோர்ட்டில் 4 பேர் சரண்


நெல்லை கோர்ட்டில் 4 பேர் சரண்
x

கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் நெல்லை கோர்ட்டில் 4 பேர் சரண் அடைந்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்தவர் இருளப்பன் என்ற ராசு (வயது 40). கட்டிடத்தொழிலாளி. நேற்று முன்தினம் மதியம் இவரது வீட்டுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல், அங்கு தூங்கி கொண்டிருந்த இருளப்பனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் இருளப்பன் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த வினோத், ரெங்கமூர்த்தி, ரஞ்சித்குமார், பூபதிராஜா ஆகியோர் நெல்லை 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். இவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு விஜயராஜ்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே சரண் அடைந்த 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் தாலுகா போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு தான் இருளப்பன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story