கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 4 பேர் கைது


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 4 பேர் கைது
x

ரிஷிவந்தியம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் கெடிலம் கூட்டு்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் மாதவன் (வயது 19), ரிஷிவந்தியத்தை சேர்ந்த சாமுண்டி மகன் விஜயகுமார் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் கா.பாளையம் கிராமத்தில் உள்ள அமைச்சரம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,122 மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story