மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது
மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தன்று கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் சரத்குமார், ராஜா தலைமையிலான போலீசார் தா.பழூர் கடைவீதி பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது தா.பழூர் அருகே உள்ள பொற்பொதிந்தநல்லூரை சேர்ந்த ராம்குமார் (வயது 17) என்பவரிடமிருந்து 17 மது பாட்டில்களும், அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (21) என்பவரிடமிருந்து 17 மது பாட்டில்களும், தா.பழூர் காலனி தெருவை சேர்ந்த வைகுண்டன் (43) என்பவரிடமிருந்து 5 மது பாட்டில்களும், நாயகனைபிரியாள் வடக்கு தெருவை சேர்ந்த சின்னதுரை (58) என்பவரிடம் இருந்து 5 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்க முயன்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story