பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 பேர் கைது


பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 பேர் கைது
x

பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 பேர் கைது

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் மற்றும் போலீசார் தக்கலை அருகில் உள்ள கல்குறிச்சி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சிலர் கும்பலாக இருப்பதை கண்டு அருகே சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் பணம் வைத்து சீட்டு விளையாடியது தெரியவந்தது. இதனையடுத்து சீட்டு விளையாடிய அதே பகுதியை சேர்ந்த மார்டின் (வயது60), ஆல்வின் ஜோஸ் (44), டென்னிஸ் ராஜ் (51) மணி (41) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story