புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கடைகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்ற சோமு (வயது 58) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கரூர் வாங்கல் பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கவாசகம் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக சுப்பிரமணி (66), பழனியப்பன் (62), தங்கராஜ் (60) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire