மதுபானம், புகையிலைப் பொருட்கள் கடத்திய 4 பேர் கைது


மதுபானம், புகையிலைப் பொருட்கள் கடத்திய 4 பேர் கைது
x

பெரியகுளத்தில் மதுபானம், புகையிலைப் பொருட்கள் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையில் சிறப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த டிரைவர் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் காரை ஓட்டியவர் திண்டுக்கல் மாவட்டம் செந்துறை தாலுகா, குரும்பபட்டியை சேர்ந்த தினேஷ் (வயது 20) என்றும், அவருடன் அதே ஊரை சேர்ந்த ரமேஷ் (38), தேனி அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (49), புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா சீத்தாபட்டியை சேர்ந்த பழனியாண்டி (36) என்பதும், அவர்கள் மதுபாட்டில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.83 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள், ரூ.37 ஆயிரம் மதிப்புள்ள 482 மது பாட்டில்கள் மற்றும் ரூ.25 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story