மண் கடத்திய 4 பேர் கைது
ஸ்ரீமுஷ்ணம் அருகே மண் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் பகுதியில் ஸ்ரீமுஷ்ணம் சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுமாறன், மதுபாலன், தலைமை காவலர் செல்வராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தண்டக்காரன்குப்பம் சித்தேரியில் 3 டிராக்டர்களில் பொக்லைன் எந்திரம் மூலம் 4 பேர் ஏரி மண்ணை ஏற்றிக்கொண்டிருந்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தண்டக்காரன்குப்பம் மேலத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்லையா (வயது 37), அதே பகுதியில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் அழகுதுரை (43), சேல்விழி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் செந்தில்நாதன் (48), காடுவெட்டி மெயின் ரோட்டை சேர்ந்த ராஜாராம் மகன் ராஜதுரை (29) என்பதும், அனுமதியின்றி ஏரி மண்ணை கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த பொக்லைன் எந்திரம், 3 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.