சாராயம் விற்ற 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
சாராயம் விற்ற 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்
பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்த முத்தரசன் (30), மத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன் (48), லாலாப்பேட்டை கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (32), கோட்டைச் சேரி கிராமத்தை சேர்ந்த வல்லரசன் (21) ஆகிய 4 பேர் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மாவட்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story