நாய்களை வைத்து வேட்டையாட முயன்ற 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
கடையம் அருகே நாய்களை வைத்து வேட்டையாட முயன்ற 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தென்காசி
கடையம்:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டம் கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட கடையம் பீட் பகுதியான ராவுத்தபேரி கிராமத்தில் நாய்களை வைத்து வேட்டையாட முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடையம் வனச்சரக அலுவலர் கருணாமூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு நாய்களை வைத்து வேட்டையாட முயன்ற ராவுத்தபேரியை சேர்ந்த நடராஜன் மகன் மாரிக்கனி (வயது 37), பச்சைமால் மகன் சண்முகவேல் (47), சுப்பிரமணியன் (53), சமுத்திரபாண்டி மகன் ஆறுமுகம் (39) ஆகிய 4 பேரை பிடித்தனர். பின்னர் இதுதொடர்பாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின் பேரில், 4 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
Related Tags :
Next Story