ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 4 பேர் மீட்பு


ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 4 பேர் மீட்பு
x

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 4 பேர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, புஷ்பா உள்ளிட்ட ரெயில்வே போலீசார் நேற்று பிளாடேே்பாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த 4 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அடுத்த பாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி (வயது 50), திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த பழனி (62), சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (43), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்கம் (58) என்பதும், இவர்கள் ஆதரவற்ற நிலையில் வெளியூர் சென்று பிழைத்து கொள்ளலாம் என நினைத்து ஜோலார்பேட்டை பகுதிக்கு ரெயில் மூலம் வந்து ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் நான்கு பேரையும் மீட்டு ஜோலார்பேட்டை அருகே மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் நேசம் முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story