பஞ்சாயத்து தலைவியின் கணவர் உள்பட 4 பேர் கைது


பஞ்சாயத்து தலைவியின் கணவர் உள்பட 4 பேர் கைது
x

நாய்களை கொன்ற வழக்கில் பஞ்சாயத்து தலைவியின் கணவர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

விருதுநகர்


விருதுநகர் அருகே ஓ.சங்கரலிங்கபுரம் கிராமத்தில் நாய்களை கொன்றதாக பிராணிகள் நல ஆர்வலர் விருதுநகர் குமராபுரத்தை சேர்ந்த சுனிதா ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பஞ்சாயத்து தலைவி நாகலட்சுமி, அவரது கணவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து புதைக்கப்பட்ட நாய்களின் உடல்கள் தோண்டி எடுத்து கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நாய்களை கொன்றதாக பஞ்சாயத்து தலைவி நாகலட்சுமியின் கணவர் மீனாட்சி சுந்தரம் (வயது 43), ஓ. சங்கரலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (38), அய்யனார் (40), தங்கப்பாண்டி (43) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.



Related Tags :
Next Story