மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
x

மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மனைவி வசந்தா (வயது 68). சம்பவத்தன்று இவர், தஞ்சை ஈ.பி. காலனியில் உள்ள தனது மருமகள் வீட்டிற்கு வருவதற்காக பாலையூரில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்சில் ஏறி பழைய பஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது பஸ் நிலையத்தில் வைத்து பார்த்த போது கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பஸ்சில் பயணம் செய்தபோது மர்மநபர்கள் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story