காரில் தூங்கிய பெண்களிடம் 4 பவுன் நகை-செல்போன் திருட்டு
காரில் தூங்கிய பெண்களிடம் 4 பவுன் நகை-செல்போன் திருட்டு
பெரம்பலூர்:
சென்னை சோழபுரம் குமார் நகர் ஸ்ரீதர் அவன்யூவை சேர்ந்தவர் பிரதீப்குமார்(வயது 52). இவர் சென்னையில் இருந்து தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர் குடும்பத்தினருடன் மதுரையில் நடந்த காதணி விழாவிற்காக காரில் சென்றுவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் இரவு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை ஓய்வு எடுத்துவிட்டு செல்வதற்காக அவர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், வல்லாபுரம் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே காரை நிறுத்திவிட்டு, காருக்குள் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்மநபர் காரில் தூங்கிய பெண்களிடம் இருந்து 4 பவுன் நகை, செல்போன் இருந்த கைப்பையை ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். இது தொடர்பாக பிரதீப்குமார் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.