பெண்ணிடம் 4 பவுன் தாலி செயின் பறிப்பு


பெண்ணிடம் 4 பவுன் தாலி செயின் பறிப்பு
x

கே.வி.குப்பம் அருகே கால்நடை மருத்துவரின் மனைவியிடம் 4 பவுன் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்

செயின் பறிப்பு

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா, மேல்மாயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், கால்நடை மருத்துவர். இவரது மனைவி மைதிலி (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் பொருள் வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அப்போது அந்த கடைக்கு முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு மர்ம நபர்கள், பொருள் வாங்க காத்திருப்பது போல் நின்றனர். அவர்கள் கடையில் நின்றிருந்த மைதிலியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி செயினை திடீரென பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

போலீஸ் விசாரணை

தாலி செயினை மர்ம நபர்கள் பறித்த போது, அதன் சிறு பகுதி மட்டும் அறுந்து கீழே விழுந்தது. பெரும்பகுதியை மர்மநபர்கள் கையில் எடுத்துச் சென்று விட்டனர். உடனடியாக இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் மைதிலி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story