பள்ளி பணியாளர்கள் 4 பேர் போக்சோவில் கைது


பள்ளி பணியாளர்கள் 4 பேர் போக்சோவில் கைது
x

பள்ளி பணியாளர்கள் 4 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

ஜீயபுரம்:

பாலியல் தொந்தரவு

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின்படி மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா, குழந்தைகள் நல அலுவலர் ராகுல் காந்தி மற்றும் உறுப்பினர்கள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் மெர்லின் ஜோசப் ராணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த 6 மாதமாக, அந்த பள்ளியின் பணியாளர்களான சிவகிரி(வயது 34), பார்த்திபன்(44), இயேசுராஜ்(32) மற்றும் தனசேகர் ஆகியோர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

4 பேர் கைது

இது குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா, ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்ேபரில் அவர்கள் 4 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story