புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு `சீல்'


புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு `சீல்
x

மதுரை நகரில் புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு `சீல்' வைக்கப்பட்டு உள்ளது.

மதுரை

மதுரை நகரில் புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு `சீல்' வைக்கப்பட்டு உள்ளது.

எச்சரிக்கை

மதுரை மாநகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்கள் விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மதுரை மாநகர போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் குட்கா விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு வருகிறது.மேலும் உணவு பாதுகாப்பு துறையினரும் குட்கா விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைத்து வருகிறார்கள். மதுரையில் போலீசார், உணவு பாதுகாப்புத்துறை யினரின் எச்சரிக்கை மீறி தொடர்ந்து குட்கா விற்பனை செய்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது

4 கடைகளுக்கு சீல்

அதன்படி மதிச்சியம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மகாதேவன் என்பவருக்கு சொந்தமான பெட்டி கடையில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் மீது 20 முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யபட்டுள்ளார்.

இந்தநிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் நேற்று அதிரடியாக அந்த கடையை சோதனை செய்தனர். அங்கு குட்காவை கைப்பற்றி கடைக்கு சீல் வைத்தனர்.

அதைத் தொடர்ந்து செல்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கட்டபொம்மன்நகர், ஜீவா தெருவில் உள்ள ஒரு கடையில் குட்கா கைப்பற்றப்பட்டு அந்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இதே போன்று திருநகரில் குட்கா விற்ற 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது

மதுரையில் தொடர்ந்து குட்கா விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு தொடர்ந்து குட்கா விற்று பலமுறை வழக்கு பதிவு செய்யப்பட்ட 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story