4 மாணவ-மாணவிகள் தற்கொலை முயற்சி
விழுப்புரம் மாவட்டத்தில் 4 மாணவ-மாணவிகள் தற்கொலை முயற்சி மேற்கொண்டனா்.
விழுப்புரம்
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களும், மதிப்பெண் குறைந்த மாணவர்களும் பெற்றோர்களுக்கு பயந்து விபரீத செயல்களில் ஈடுபட்டனர். அந்த வகையில் விழுப்புரம் பகுதியைச்சேர்ந்த 15 வயதுடைய மாணவன், தேர்வில் தோல்வியடைந்ததால் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதேபோல் காணை போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஒரு மாணவி தேர்வில் தோல்வியடைந்ததாலும், கண்டமங்கலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ஒரு மாணவியும், விழுப்புரம் பகுதியைச்சேர்ந்த ஒரு மாணவியும் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாலும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் 4 பேரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story