நெல்லை மாவட்டத்தில் 4 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் 4 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் சிப்காட் அலகு-3 சூரிய ஒளி மின்சக்தி திட்ட நில எடுப்பு தனித்தாசில்தார் சரவணன் பாளையங்கோட்டை தாசில்தாராகவும், சேரன்மாதேவி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், சிப்காட் அலகு-3 சூரிய ஒளி மின்சக்தி திட்ட நில எடுப்பு தனித்தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிப்காட் அலகு-1 சூரிய ஒளி மின்சக்தி திட்ட நில எடுப்பு தனித்தாசில்தார் சங்கர், முழு கூடுதல் பொறுப்பில் மானூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், சேரன்மாதேவி கோட்டக்கலால் அலுவலர் ரமேஷ், கூடுதல் பொறுப்பில் சேரன்மாதேவி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story