4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த வாகனத்தில் 95 சாக்கு மூடைகளில் 4 ஆயிரத்து 750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதை தொடர்ந்து ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பரமக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவரை தேடி வருகின்றனர்.


Next Story