சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் பகுதியாக ரத்து


சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் பகுதியாக ரத்து
x

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்வதால் சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சேலம்

சூரமங்கலம்:

வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சேலம், திருப்பூர், ஈரோடு வழியாக செல்லும் கீழ்கண்ட ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை - சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12515) நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 10-ந் தேதி கோவை ரெயில் நிலையத்திலிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு கவுகாத்தி வரை செல்லும். கவுகாத்தி - சில்சார் இடையே ரத்து செய்யப்படுகிறது. சில்சார் -கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் (12516) வருகிற 5-ந் தேதி மற்றும் 12-ந் தேதிகளில் சில்சார் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படாமல் கவுகாத்தியில் இருந்து புறப்படும்.

திருவனந்தபுரம்- சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் (12507) வருகிற 5-ந் தேதி மற்றும் 12-ந் தேதிகளில் திருவனந்தபுரத்தில் மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு கவுகாத்தி ரெயில்நிலையம் வரை மட்டும் செல்லும். கவுகாத்தி - சில்சார் ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது, இதேபோல் சில்சார் -திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (12508) வருகிற 7-ந் தேதி மற்றும் 14-ந் தேதிகளில் கவுகாத்தி ரெயில்நிலையத்தில் இருந்து புறப்படும்.

மேற்கண்ட தகவலை சேலம் ெரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story