சாராயம் விற்ற 4 பெண்கள் கைது


சாராயம் விற்ற 4 பெண்கள் கைது
x

குடியாத்தம் அருகே சாராயம் விற்ற 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் சாராயம் விற்பதாக வந்த தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன், பெருமாள் உள்ளிட்ட போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

சேங்குன்றம் கிராமத்தில் நடத்திய சோதனையில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த பாரதி (வயது 46), சந்திரா (50), சுந்தரி (42), சிவகாமி (60) ஆகிய 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 250 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.


Related Tags :
Next Story