கோவில் விழாவில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 4 பெண்கள் சிக்கினர்


கோவில் விழாவில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 4 பெண்கள் சிக்கினர்
x

நெல்லையப்பர் கோவில் விழாவில் கூட்ட நெரிசலில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 4 பெண்கள் போலீசாரிடம் சிக்கினர்

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட மதுரை பகுதியை சேர்ந்த 4 இளம்பெண்கள் போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களிடம் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதேபோல் 2 பெண்களிடம் சங்கிலி பறிக்க முயன்ற பெண்களையும் போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.


Next Story