திருப்பூரில் போலி ஆதார் கார்டுடன் தங்கியிருந்த வங்கதேச வாலிபருக்கு 3 ஆண்டு சிறை


திருப்பூரில் போலி ஆதார் கார்டுடன் தங்கியிருந்த வங்கதேச வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 16 Dec 2022 7:47 PM IST (Updated: 16 Dec 2022 7:58 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் போலி ஆதார் கார்டுடன் தங்கியிருந்த வங்கதேச வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூர்

திருப்பூர்,

திருப்பூரில் போலி ஆதார் கார்டுடன் தங்கியிருந்த வங்கதேச வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

போலி ஆதார் கார்டு

திருப்பூர் நல்லூர் போலீசார் கடந்த 9-1-2018 அன்று உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேச நாடு குல்னா மாநிலத்தை சேர்ந்த மொன்வர் ஹூசைன் (வயது 37) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இந்தியாவில் வசிப்பதற்கான போலி ஆதார் கார்டு இருந்தது தெரியவந்தது. போலியாக ஆதார் கார்டை தயாரித்து அதன் மூலம் திருப்பூரில் உலவி வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலியான ஆவணங்கள் மூலமாக இந்தியாவில் இருந்த குற்றத்துக்காக மொன்வர் ஹூசைனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அங்கு 77 நாட்கள் இருந்து விட்டு பின்னர் திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.

3 ஆண்டு சிறை

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், இந்தியாவில் இருப்பதைப்போல் போலி ஆவணங்கள் தயாரித்த குற்றத்துக்காக மொன்வர் ஹூசைனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். மேலும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.

மேலும் அவர் கூறும்போது, 'மொன்வர் ஹூசைனை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்த 77 நாட்களை கழித்து மீதம் உள்ள தண்டனையை அவர் சொந்த நாட்டில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

--------


Next Story