கஞ்சா வைத்திருந்த 4 வாலிபர்கள் சிக்கினர்


கஞ்சா வைத்திருந்த 4 வாலிபர்கள் சிக்கினர்
x

அரக்கோணம் அருகே கஞ்சா வைத்திருந்த 4 வாலிபர்கள் சிக்கினார்கள்.

ராணிப்பேட்டை

தக்கோலம் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நேற்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தக்கோலம் - திருவாலங்காடு ரோட்டின் புதர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தக்கோலம் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 21) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை போலீசார் சோதனை செய்த போது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதே போன்று நேற்று மாலை அரக்கோணம் தாலுகா போலீசார் சாலை, மின்னல், நரசிங்கபுரம், வேடல் மற்றும் மாறன் கண்டிகை ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் இருந்த போது மின்னல் பகுதியில் அஜித் (23). நரசிங்கபுரம் பகுதியில் அகிலன் (20) மற்றும் மாறன் கண்டிகை பகுதியில் தேவராஜ் (27) ஆகிய வாலிபர்கள் அந்த பகுதிகளில் இருந்த போது சந்தேகத்தின் பேரில் பிடித்து அவர்களிடம் சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து தலா 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story