4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடியில் கொலை, கொள்ளை வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 4 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கொலை
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரை, அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் கருப்பசாமி என்ற கருப்பன் (வயது 27) என்பவரை வடபாகம் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி இந்திராநகர் பகுதியில சட்டவிரோதமாக கஞ்சா எண்ணெய் விற்பனைக்காக வைத்து இருந்ததாக தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்ந்த அருளப்பன் மகன் அஜன் (25) என்பவரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர். மேலும் ஸ்ரீவைகுண்டம் புதுப்பட்டி பகுதியில் வைத்து தெய்வச்செயல்புரம் டாஸ்மாக் மேற்பார்வையாளரை வழமறித்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றதாக, தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியை சேர்ந்த நாகலிங்கம் மகன் மணிகண்டன் (23), தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த முருகேசன் மகன் மாரிமுத்து (24) ஆகியோரை ஸ்ரீவைகுண்டம் போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இந்த 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கருப்பசாமி என்ற கருப்பன், அஜன், மணிகண்டன், மாரிமுத்து ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.