40 கோழிகளை கரடிகள் கடித்துக்கொன்றது


40 கோழிகளை கரடிகள் கடித்துக்கொன்றது
x

கடையம் அருகே 40 கோழிகளை கரடிகள் கடித்துக்கொன்றது

தென்காசி

கடையம்:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கடையம் வனச்சரக பகுதி எல்லைக்கு உட்பட்ட கடனா அணைப்பகுதிக்கு மேல் பகுதியில் கோரக்கநாதர் பீட் அருகே ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கோழிகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இந்த நிலத்துக்கு வந்த கரடிகள் 40 கோழிகளை கடித்துக்கொன்றது.

நேற்று காலையில் அவர் நிலத்துக்கு சென்று பார்த்தபோது கோழிகள் செத்துக்கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின்பேரில் வனச்சரக பணியாளர்கள் சென்று கரடிகள் ஊருக்குள் வரமுடியாத அளவுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story