40 அடி பாய்ந்த ஜல்லிக்கட்டு காளை
40 அடி பாய்ந்த ஜல்லிக்கட்டு காளை வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே ஆலத்தூரில் ஜல்லிக்கட்டு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதில் 737 காளைகள் அவிழ்க்கப்பட்டு 211 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். இதில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டுக்கு மத்தியில் வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளை ஒன்று கூட்டத்துக்குள் புகுந்து அங்கு வரிசையாக நின்றிருந்த கூட்டத்தினரை பார்த்தது. உடனடியாக பின்னோக்கி சென்ற காளை, கூட்டத்திற்குள் இருக்கும் பார்வையாளர்களை எந்தவித தொந்தரவும் செய்யாமல் ஒரே தாவலாக சுமார் 40 அடிக்கு மேலாக தாவி சென்ற சம்பவம் அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story