கோரக்கர் சித்தர் கோவில் மூலஸ்தான கோபுரத்தில் ரூ.40 லட்சத்தில் தங்கத்தகடு பதிப்பு
கோரக்கர் சித்தர் கோவில் மூலஸ்தான கோபுரத்தில் ரூ.40 லட்சத்தில் தங்கத்தகடு பதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்
நாகை அருகே வடக்கு பொய்கைநல்லூரில் கோரக்கர் சித்தர் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இக்கோவிலில் மூலஸ்தான கோபுரத்துக்கு தங்க முலாம் பூசப்பட்ட தகடு பதிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, ரூ.40 லட்சம் மதிப்பில் கோவையை சேர்ந்த பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட தகடு நேற்று சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோபுரத்தில் பதிக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டினை முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து, கோரக்க சித்தருக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், குங்குமம், திருநீறு உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோரக்கர் சித்தரை வழிபட்டனர்.
Related Tags :
Next Story