ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி


ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி
x

வடக்கு விஜயநாராயணத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் அடிக்கல் நாட்டினார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணத்தில் அமைந்துள்ள அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி கோவில் ரதவீதி மற்றும் மாடவீதி பாதைகள் மிகவும் சேதமடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்கபடாமல் இருந்து வந்தது. அப்பகுதி மக்கள் மேற்படி சாலையை புதிதாக அமைத்து தரும்படி நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷிடம் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று மாவட்ட பஞ்சாயத்து நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். மேலும் அந்த சாலை அமைக்கும் பணிக்கு கூடுதலாக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கி தரப்படும் என்றும் கூறினார்.

இந்த விழாவில் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உறுப்பினர் இ.நடராஜன், மாவட்ட கவுன்சிலர்கள் கனகராஜ், சாலமோன் டேவிட், ஜான்ஸ் ரூபா, லிங்கசாந்தி, சத்தியவாணிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் அகஸ்டின் கீதராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் எஸ்.சின்னத்தம்பி (சங்கனாங்குளம்), மாணிக்கதாய் சங்கர் (வடக்கு விஜயநாராயணம்) மற்றும் பரப்பாடி ஞானராஜ், நவ்வலடி சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story