இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் 40 பேர் கைது


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் 40 பேர் கைது
x

இந்து முன்னணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

தாரமங்கலம்:-

இந்து முன்னணி மாநில நிர்வாகி கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தாரமங்கலம் பஸ் நிலையம் அருகே நேற்று இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக இந்துமுன்னணி நிர்வாகிகள் திரண்டு வந்தனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த வந்த இந்து முன்னணியினர் 40 பேரை தாரமங்கலம் போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர்.


Next Story