கேரளாவுக்கு அரசு பஸ்சில் கடத்திய 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு அரசு பஸ்சில் கடத்திய 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

கூடலூரில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்சில் கடத்திய 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

தேனி

கூடலூரில் இருந்து குமுளி வழியாக அரசு, தனியார் பஸ்களில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக உத்தமபாளையம் பறக்கும் படை துணை தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை துணை தாசில்தார் முத்துக்குமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று குமுளியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் நின்று சோதனை செய்தனர்.

அப்போது கேரளாவுக்கு சென்ற அரசு பஸ்சில் சோதனை செய்தபோது 10, 20, 30 கிலோ என தனித்தனி பைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சுமார் 400 கிலோ அரிசி இருந்தது. ஆனால் அரிசியை கடத்தி வந்த நபர் யாரென்று தெரியவில்லை. பின்னர் அதிகாரிகள் அரிசியை பறிமுதல் செய்தனர்.


Next Story