குரூப்-1 தேர்வை 4075 பேர் எழுதினர்


குரூப்-1 தேர்வை 4075 பேர் எழுதினர்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற குரூப்-1 தேர்வை 4 ஆயிரத்து 75 பேர் எழுதினர். தேர்வு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற குரூப்-1 தேர்வை 4 ஆயிரத்து 75 பேர் எழுதினர். தேர்வு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஆய்வு செய்தார்.

குரூப்-1 தேர்வு

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 பிரிவில் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் என மொத்தம் 92 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது.

இந்த காலி பணியிடங்களுக்களை நிரம்புவதற்கான தேர்வு அறிக்கை கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி வெளியிடப்பட்டது.

இந்த தேர்விற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 6 ஆயிரத்து 476 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகம் என்ற 3 நிலைகளில் நடைபெறும்.

இந்த நிலையில் குரூப்-1 தேர்விற்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற்றது.

இதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி, விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி, கரன் கலைக் கல்லூரி, கம்பன் கலைக் கல்லூரி, அருணை என்ஜினீயரிங் கல்லூரி, சண்முகா தொழிற்சாலை கலைக் கல்லூரி ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

2401 பேர் தேர்வு எழுதவில்லை

இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற இத்தேர்வில் 4 ஆயிரத்து 75 பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். 2 ஆயிரத்து 401 பேர் தேர்வு எழுதவரவில்லை.

திருவண்ணாமலையில் தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story