Normal
"அறநிலையத்துறை சிறப்பு மையத்திற்கு 4,077 மனுக்கள் வந்துள்ளது" - அமைச்சர் சேகர்பாபு தகவல்
இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு மையத்திற்கு பக்தர்களிடம் இருந்து 4,077 மனுக்கள் வந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு மையத்திற்கு பக்தர்களிடம் இருந்து 4,077 மனுக்கள் வந்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 4,077 மனுக்களில் 351 மனுக்கள் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் 3,279 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். இதில் கோவில் திருப்பணி மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்து அதிக அளவிலான மனுக்கள் வந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story