மேட்டூர் அனல்மின் நிலைய என்ஜினீயர், உதவியாளர் வீட்டில் 41½ பவுன் நகை கொள்ளை போனது அம்பலம்-போலீஸ் விசாரணையில் தகவல்


மேட்டூர் அனல்மின் நிலைய என்ஜினீயர், உதவியாளர் வீட்டில் 41½ பவுன் நகை கொள்ளை போனது அம்பலம்-போலீஸ் விசாரணையில் தகவல்
x

மேட்டூர் அனல்மின் நிலைய என்ஜினீயர், உதவியாளர் வீட்டில் 41½ பவுன் நகையும், ரூ.8¾ லட்சமும் கொள்ளை போனது என்ற தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

சேலம்

மேட்டூர்:

அனல்மின் நிலைய என்ஜினீயர்

மேட்டூர் அனல் மின் நிலைய குடியிருப்பின் ஒரு பகுதி மேட்டூரை அடுத்த தொட்டில் பகுதியில் உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தில் வசித்து வரும் அனல்மின் நிலைய உதவி செயற்பொறியாளர் சந்திரகலா, தொழில்நுட்ப உதவியாளர் கதிரேசன் ஆகியோரது வீடுகளில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுதவிர மேலும் 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

41½ பவுன் நகை கொள்ளை

விசாரணையில், சந்திரகலா, கதிரேசன் ஆகியோரது வீடுகளில் 41½ பவுன் நகையும், ரூ.8 லட்சத்து 80 ஆயிரமும் கொள்ளை போனது அம்பலமாகி உள்ளது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீடுகளில் பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், கருமலைக்கூடல் இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story