ஒரேநாளில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரேநாளில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 21 Aug 2022 9:50 PM IST (Updated: 21 Aug 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

ஒரேநாளில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் முதல் தவணை மற்றும் 2-வது தவணை, பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்பட்டது.

மாவட்டம் முழுவதும் 982 இடங்களில் நடந்த முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இந்த முகாம்களில் ஒரேநாளில் 41 ஆயிரத்து 592 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story