திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட 42 பேர் பணியிட மாற்றம்
திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட 42 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் நிலையில் பணியாற்றிய 42 பேர் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருச்சி மாவட்ட டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளராக பணியாற்றி வந்த மாலதி, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் நுண் பல்கலைக்கழக பதிவாளர் ரவிச்சந்திரன் திருச்சி மாவட்ட டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளராகவும், திருச்சி தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு மற்றும் மேலாண்மை தனி மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி சென்னை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக இணை இயக்குனராகவும், கடலூர் நெய்வேலி நிலக்கரி கழக நிலம் எடுப்பு முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி திருச்சி ஆவின் பொது மேலாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.