பழுதடைந்த 436 வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு


பழுதடைந்த 436 வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு
x

பழுதடைந்த 436 வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

வேலூர்

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என தலைமை தேர்தல் அலுவலர் உத்தரவிட்டார். அதன்படி வேலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்ட எந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பணியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.

அவர் கூறுகையில், பழுதடைந்த வாக்குப்பதிவு தொடர்பான 436 அனைத்து வகை எந்திரங்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள மற்ற வாக்குப்பதிவு எந்திரங்களும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பழைய குடோனில் உள்ள எந்திரங்களும் புதிய குடோனுக்கு மாற்றப்படும் என்றார்.

ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story