மினிவேனில் 44 கிலோ புகையிலை கடத்திய வாலிபர் கைது


மினிவேனில் 44 கிலோ புகையிலை   கடத்திய வாலிபர் கைது
x

தட்டார்மடம் அருகே மினிவேனில் 44 கிலோ புகையிலை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே மினி வேனில் 44 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் சோதனை

சாத்தான்குளம் ேபாலீஸ் துணை சூப்பிரண்டு அருள் மேற்பார்வையில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருச்செந்தூர்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் தட்டார்மடம் அருகே பெரியதாழை மேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

புகையிலை கடத்தல்

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த மினி வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த மினிவேனில் 44 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. வேனில் இருந்த சாத்தான்குளம் தச்சமோழி ஜோசப்சூரியராஜ் மகன் சுந்தர்சிங்கை(வயது33) போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது. மினி வேனுடன் 44 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் ெசய்தனர்.

கைது

இது தொடர்பாக தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர்சிங்கை கைது செய்தனர். மேலும், எங்கிருந்து புகையிலை பொருட்களை எங்கு கடத்தி சென்றார்? இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story