திருவாரூருக்கு 44 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூருக்கு 44 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருவாரூர்;
ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூருக்கு 44 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஆழித்தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று நடக்கிறது. தேரோட்டத்தில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்க உள்ளனர். ஆழித்தேரோட்டத்தை காண திருவாரூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திருவாரூருக்கு வருவார்கள். ஏற்கனவே பொதுமக்கள் வசதிக்காக தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் சார்பில் விழுப்புரம் மற்றும் திருச்சியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கபபட்டு உள்ளது.இதைப்போல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
44 சிறப்பு பஸ்கள்
அதன்படி மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், நாகை, கும்பகோணம், தஞ்சை உள்ளிட்ட இடங்களில் இருந்து மொத்தம் 44 சிறப்பு பஸ்கள் திருவாரூருக்கு இயக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக பஸ்கள் தேவைப்பட்டால் அதற்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.