திருச்சி மாவட்டத்தில் 44 ஆயிரத்து 399 பேருக்கு கொரோனா தடுப்பூசி


திருச்சி மாவட்டத்தில் 44 ஆயிரத்து 399 பேருக்கு   கொரோனா தடுப்பூசி
x

திருச்சி மாவட்டத்தில் நடந்த மெகா சிறப்பு முகாம் மூலம் 44 ஆயிரத்து 399 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நடந்த மெகா சிறப்பு முகாம் மூலம் 44 ஆயிரத்து 399 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 15 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பு முகாம்கள் மூலமாகவும், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பள்ளிகள் மூலமாகவும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 36 சுற்றுகள் நடைபெற்றுள்ளன.

இந்தநிலையில் நேற்று 37-வது சுற்று சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஊரக பகுதிகளில் 1,220 முகாம்களும், மாநகர பகுதிகளில் 600 முகாம்களும் என மொத்தம் 1,820 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், மகாத்மாகாந்தி அரசு மருத்துவமனை, பிறஅரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்ற இந்த முகாம்களில் மாவட்டம் முழுவதும் 44 ஆயிரத்து 399 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

கோவிஷீல்டு முதல் தவணை

இதில் கோவிஷீல்டு முதல் தவணை செலுத்தி கொண்ட 848 பேரும், 2-வது தவணை செலுத்தி கொண்ட 10ஆயிரத்து 422 பேரும், முன்னெச்சரிக்கை தவணை செலுத்தி கொண்ட 19ஆயிரத்து 112 பேரும், கோவாக்ஸின் முதல் தவணை செலுத்தி கொண்ட 578 பேரும், 2-வது தவணை செலுத்தி கொண்ட 1,669 பேரும், முன்னெச்சரிக்கை தவணை செலுத்தி கொண்ட 10ஆயிரத்து 833 பேரும், கோர்பேவாக்ஸ் செலுத்தி கொண்ட 937 பேரும் அடங்குவர்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி மெகா முகாம்களில் அதிக அளவு தடுப்பூசி செலுத்தி சிறப்பான நிலையை எட்டியதற்கு சுகாதாரத்துறையினர் மற்றும் ஒருங்கிணைந்து பணியாற்றிய அனைத்துத்துறை பணியாளர்களுக்கும் கலெக்டர் பிரதீப் குமார் பாராட்டுக்களை தெரிவித்தார்.


Next Story