மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 446 மனுக்கள் பெறப்பட்டன


மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 446 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 446 மனுக்கள் பெறப்பட்டன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 446 மனுக்கள் பெறப்பட்டன.

குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக லூயி பிரெய்லி கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 446 மனுக்கள் பெறப்பட்டன. மனு அளிப்பதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று துறைசார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார்.

மாணவ-மாணவிகளுக்கு பரிசு

தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூய்மை நிகழ்வுகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, தனித்துணை கலெக்டர் திருப்பதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story