சுற்றுலா வாகனங்களை நிறுத்த ரூ.45 கோடியில் அடுக்குமாடி கட்டிடம்


சுற்றுலா வாகனங்களை நிறுத்த ரூ.45 கோடியில் அடுக்குமாடி கட்டிடம்
x
தினத்தந்தி 9 Sept 2023 1:15 AM IST (Updated: 9 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon
திண்டுக்கல்

திட்ட பணிகள் ஆய்வு

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் பிரசித்தி பெற்ற நட்சத்திர ஏரியை சுற்றி ரூ.28 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவையில்லாமல் ரூ.1 கோடியே 54 லட்சத்தில் பஸ்நிலையத்தில் நவீன கழிப்பறை உள்பட பல்வேறு சீரமைப்பு பணிகளும், அண்ணா சாலையில் ரூ.3 கோடியே 56 லட்சத்தில் நவீன காய்கறி அங்காடி மையம் கட்டிட பணியும் நடந்து வருகிறது. நகரில் ரூ.2 கோடியே 29 லட்சத்தில் பல்வேறு பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டப் பணிகளை நகராட்சிகளின் மண்டல பொறியாளர் மனோகரன் நேற்று ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன், ஆணையர் சத்யநாதன், பொறியாளர் விஸ்வநாதன், உதவி பொறியாளர் செல்லத்துரை, கவுன்சிலர் ஆண்டவர் அப்பாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்

ஆய்வின் முடிவில் மண்டல பொறியாளர் கூறுகையில், கொடைக்கானல் பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகள் முடிவடைந்த பின்னர் பராமரிப்பு பணி மேற்கொள்ள தனியார் வசம் ஒப்படைக்கப்படும். சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்காக அடுக்குமாடி கட்டிடம் அமைப்பதற்கு ரூ.45 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. நிதி பெறப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, அடுத்த சீசனுக்குள் முடிக்கப்படும். ஏரியை சுற்றி சுமார் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் பணிகளை முடித்துக் கொடுக்க ஒப்பந்தாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவடைந்ததும் படகு இல்லம் திறக்கப்படும். நகரில் குடிநீர் திட்டங்களுக்காக மேலும் ரூ.2 கோடியே 15 லட்சம் நிதி தேவைப்படுகிறது. அந்த நிதி விரைவில் கிடைக்கும் சூழ்நிலையில் உள்ளது. அய்யர் கிணறு பகுதியில் சுமார் 80 ஆண்டுகள் சாலை வசதி இல்லாத மக்களுக்கு தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை தரமாக அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.


Next Story