45 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மதுரை, திருச்சி, நெல்லைக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள்
தமிழகத்தில் 45 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். மதுரை, திருச்சி, நெல்லை மற்றும் திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழக காவல்துறையில் 5 ஐ.ஜி.க்கள் கூடுதல் டி.ஜி.பி.க்களாகவும், 5 டி.ஐ.ஜி.க்கள் ஐ.ஜி.க்களாகவும், 16 போலீஸ் சூப்பிரண்டுகள் டி.ஐ.ஜி.க்களாகவும் நேற்று பதவி உயர்வு பெற்றனர்.இதையொட்டி 45 உயர் போலீஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. அதன் விவரம் வருமாறு:-
ஈஸ்வரமூர்த்தி-அருண்
1. அருண்-சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி ஐ.ஜி.யாக பணியில் உள்ளார். இவர் பதவி உயர்வு பெற்று, சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. கல்பனா நாயக்-மின்சார வாரிய விஜிலன்ஸ் ஐ.ஜி.யாக பதவி வகிக்கிறார். இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
3. ஈஸ்வர மூர்த்தி-உள்நாட்டு பாதுகாப்பு உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக உள்ள இவர் பதவி உயர்வு பெற்று, போலீஸ் அகாடமி கூடுதல் டி.ஜி.பி.யாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. அவிபிரகாஷ்-மத்திய உளவுப்பிரிவில் (ஐ.பி.) ஐ.ஜியாக பணியாற்றும் இவர் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதே மத்திய உளவுப்பிரிவில் தொடர்ந்து பணியாற்றுவார்.
5. வித்யா ஜெயந்த்குல்கர்னி-ஐ.ஜி.யான இவர் சி.பி.ஐ. இணை இயக்குனராக பணியில் உள்ளார். இவர் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தொடர்ந்து சி.பி.ஐ.யில் பணியாற்றுவார்.
திருப்பூர் - மதுரை கமிஷனர்கள்
6. வன்னியபெருமாள்-பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ள இவர், தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை விஜிலென்ஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
7. பிரவீன்குமார் அபினப்பு-சேலம் சரக டி.ஐ.ஜி.யாக உள்ள இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, திருப்பூர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. நரேந்திரன் நாயர்-தென் சென்னை இணை போலீஸ் கமிஷனராக, டி.ஐ.ஜி. அந்தஸ்தில் பணியாற்றி வரும் இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, மதுரை போலீஸ் கமிஷனராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
9. ரூபேஸ்குமார் மீனா-திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று, அமலாக்கத்துறை ஐ.ஜி.யாக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
திருச்சி போலீஸ் கமிஷனர்
10. சத்திய பிரியா-காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக உள்ள இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, திருச்சி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. விஜயேந்திர எஸ்.பிதாரி-டெல்லியில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தொடர்ந்து டெல்லியில் பணியாற்றுவார்.
12. அவினாஷ்குமார்-நெல்லை போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
13. தமிழ்சந்திரன்-டி.ஜி.பி. அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவு ஐ.ஜி.யாக உள்ள இவர், போலீஸ் பயிற்சி கல்லூரி ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.
14. சந்தோஷ்குமார்-திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நவீன மயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.
மத்திய மண்டல புதிய ஐ.ஜி.
15. கார்த்திகேயன்-திருச்சி போலீஸ் கமிஷனர் பதவியில் உள்ள இவர், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
16. சி.விஜயகுமார்-சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று, கோவை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
17. திஷா மிட்டல்-சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் பதவியில் உள்ள இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
18. எம்.துரை-டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர் பதவி உயர்வு பெற்று, ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
19. மகேஷ்-சென்னை ஆவடி கமிஷனரகத்தில் துணை கமிஷனராக உள்ள இவர் பதவி உயர்வு பெற்று, உள்நாட்டு பாதுகாப்பு உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.யாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
20. அபினவ்குமார்-திருப்பூர் நகர துணை கமிஷனராக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
காஞ்சீபுரம் டி.ஐ.ஜி.
21. சிபி சக்கரவர்த்தி-தாம்பரம் கமிஷனரகத்தில் துணை கமிஷனராக பதவி வகிக்கும் இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, தென் சென்னை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
22. ஜியாவுல் ஹக்-சி.பி.சி.ஐ.டி. சிறப்பு பிரிவு சூப்பிரண்டான இவர் பதவி உயர்வு பெற்று, சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி.யாக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
23. டாக்டர்.பி.விஜயகுமார்-சீருடை பணியாளர் தேர்வாணய சூப்பிரண்டாக உள்ள இவர் பதவி உயர்வு பெற்று, சென்னை ரெயில்வே டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
24. பகலவன்-கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் பதவி உயர்வு பெற்று, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
25. சாந்தி-சென்னை நிர்வாகப்பிரிவு உதவி ஐ.ஜி.யாக பொறுப்பு வகிக்கும் இவர் பதவி உயர்வு பெற்று, நிர்வாகப்பிரிவு டி.ஐ.ஜி.யாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை சரக டி.ஐ.ஜி.
26. விஜயலட்சுமி-ஆவடி சிறப்பு காவல்படை கமாண்டராக பணியாற்றும் இவர் பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
27.பா.மூர்த்தி-தாம்பரம் கமிஷனரகத்தில் தலைமையக துணை கமிஷனராக உள்ள இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, தாம்பரம் கமிஷனரகத்தில் சட்டம்-ஒழுங்கு இணை கமிஷனராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். இந்த பதவி புதிய பதவி ஆகும்.
28. ஜெயச்சந்திரன்-சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று, தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.
29. மனோகர்-விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்றுள்ளார். டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.
30. தர்மராஜன்-கேரள மாநிலம் கொச்சி என்.ஐ.ஏ. சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதே பிரிவில் தொடர்ந்து பணியாற்றுவார்.
நெல்லை போலீஸ் கமிஷனர்
31. சமந்த்ரோகன் ராஜேந்திரா-டெல்லி மத்திய அமைச்சரவை சார்பு செயலாளராக சூப்பிரண்டு அந்தஸ்தில் பணியாற்றும் இவர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். டெல்லியில் தொடர்ந்து பணி புரிவார்.
32. ராஜேஸ்வரி-சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனராக பணியாற்றும் இவர், சேலம் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
33. மயில்வாகனன்-ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர், சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
34. எஸ்.ராஜேந்திரன்-சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பணியில் உள்ள இவர், நெல்லை போலீஸ் கமிஷனராக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
35. சியாமளா தேவி-சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராக பணியாற்றும் இவர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.
தாம்பரம் துணை கமிஷனர்
36. எஸ்.மணி- பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை தாம்பரம் கமிஷனரகத்தில் தலைமையக மற்றும் நிர்வாக பிரிவு துணை கமிஷனராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
37. மோகன்ராஜ்-மதுரை நகர வடக்கு துணை கமிஷனராக பணியாற்றும் இவர், கள்ளக்குறிச்சி மாவட்ட சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
38. சீனிவாசபெருமாள்-மதுரை தெற்கு துணை கமிஷனராக பணியாற்றும் இவர், விருதுநகர் மாவட்ட சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
39. சாய் பிரனீத்-பொருளாதார குற்றப்பிரிவு மத்திய மண்டல சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், மதுரை தெற்கு துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
40. டி.செந்தில்குமார்-சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியில் உள்ள இவர், திருச்சி ரெயில்வே சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.
41. அதிவீரபாண்டியன்-திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், தாம்பரம் கமிஷனரகத்தில் சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
மயிலாப்பூர் துணை கமிஷனர்
42.ரோகித் நாதன் ராஜகோபால்-மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு சூப்பிரண்டாக உள்ள இவர், சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
43.கே.மீனா-சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக (2) பணியாற்றும் இவர், டி.ஜி.பி. அலுவலக தலைமையக உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
44.ஆதர்ஷ் பச்சேரா-சென்னை தியாகராயநகர் துணை கமிஷனராக உள்ள இவர், சென்னை சொத்துரிமை செயலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.
45.பாஸ்கரன்-ராமநாதபுரம் மாவட்ட சைபர் குற்ற பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக உள்ள இவர் பதவி உயர்வு பெற்று, ஆவடி கமிஷனரகத்தில் சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.