451 மனுக்கள் மீது தீர்வு காண கலெக்டர் உத்தரவு


451 மனுக்கள் மீது தீர்வு காண கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட 451 மனுக்கள் மீது தீர்வு காண கலெக்டர் உத்தரவிட்டாா்.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா, நில அளவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதாவது, பட்டா தொடர்பான 88 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கேட்டு 58 மனுக்களும், வேலைவாய்ப்புக்காக 37 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 54 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 32 மனுக்களும், இதர மனுக்கள் 182 ஆக மொத்தம் 451 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை பெற்ற கலெக்டர், அவற்றை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் துறை ரீதியாக மேஜைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை மூலம் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story